Publisher: உயிர்மை பதிப்பகம்
தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை.
பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன...
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
அதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
இருளில் நகரும் யானைஇழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய..
₹266 ₹280
Publisher: உயிர்மை பதிப்பகம்
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹124 ₹130